புதன், 26 டிசம்பர், 2012

வெந்தணலில்



                                    வெந்தணலில்

      புதிய நாட்டாமையாக இரத்தினவேலின் தேர்வு செபத்தையாபுரத்திற்கும்ää சுற்றுப்பட்டிகளுக்கும் பெருமையாக இருந்தது. நல்ல கருப்பு நிறத்தில் செதுக்கினாற்போல் முகவெட்டு. நிமிர்ந்த நடை. ஆறடியைக் கடந்த உயரம். ஏறிட்டுப் பார்க்க தயக்கத்தைத் தரும் சிங்க விழிகள்.
    சுற்றுவட்டாரங்களில் இரத்தினவேலுக்குத் தனி செல்வாக்கு இருந்தது. போராட்டக் குணமுள்ளவர். வளைந்து கொடுக்கும் பழக்கமில்லை. பாபநாசம் அணைத் தண்ணீர் முறைப்படி பாசனத்திற்குத் திறந்து விடப்படவில்லை என்றால்ää மாவட்ட ஆட்சியாளரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். அவர் பின்னால் திரளும் கூட்டத்தைப் பார்த்தே ஆட்சியாளர் அரண்டு போவதுண்டு. ‘அணை திறப்பதில் ஊருக்கு ஊர் என்ன எதிர்பார்க்கிறீர்கள்’ என்று கேட்டுமானத்தை வாங்கி விடுவார்.
    தூத்துக்குடியில் ஒருமுறை காவல்துறை ஆய்வாளர் வண்டிகளைச் சோதித்தபோதுää இரத்தினவேலின் ஜீப்பைக் கம்பு கொண்டு தட்டி… “என்ன பார்க்கறே… லைசென்ஸ் எடு…” என்று சொன்ன வார்த்தைக்கு அவர்மேல் மானநஷ்ட வழக்குப் போட்டார்.
    ‘மக்கள் வரிப்பணத்தில் வேலை பார்க்கும் ஒரு காவல் அதிகாரி மரியாதை இல்லாமல் எவ்வாறு பேசுவது? மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத் தெரியாதவர்களுக்கெல்லாம் எதற்காக மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி அழ வேண்டும்’ என்று சீறி எழுந்துவிட்டார்.
நிலைமையின்  விபரீதத்தை புரிந்து கொண்ட ஆய்வாளர் தனிமையில் இரத்தினவேலின் காலைப் பிடிக்க வேண்டியது வந்தது. வழக்கும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஓடும் பஸ்ஸில் தெருப் பொறுக்கி ஒருவன்ää குடிபோதையில் இளம்பெண் ஒருத்தி முன் நின்று ஆடை களைந்தபோது… ஆண்கள் அத்தனை பேரும் பேடிகளாய்ச் செயலற்றிருக்க.. இரத்தினவேல் அவனது மறைவிடத்தில் ஓங்கி மிதித்துää ஓடும் பஸ்ஸில் இருந்து வெளியே தள்ளினார். அவன் உயிர் தப்பியதே பெரிய விஷயமாயிற்று.
தவறு செய்யும் அரசாங்க உயர் அதிகாரிகளானாலும்ää சமூகக் குற்றவாளிகளான ரவுடிகளானாலும்ää எவரானாலும் அவர் ஓதுங்கியது கிடையாது. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அது ஓன்றுதான் அச்சம் தருவதாக இருந்தது.
ஓவ்வொரு விடியலும் இரத்தின வேலுக்குப் பரபரப்பானவை. அன்றும் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தைக் கவனித்துவிட்டு பண்ணைக்கு வந்தபோது செல்போன் அலறியது.
“என்ன விஷயம்…?”
“முக்கியமான பிரச்சினை… உடனே புறப்பட்டு வாங்க…”
அரைமணியில் செபத்தையாபுரம் வந்தார். திடலில் ஊரே திரண்டிருந்தது.
“நாட்டாமை வந்தாச்சு… வழியை விடுங்க…”
கூட்டத்தைக் கண்களால் அளந்த படியே மேடைக்கு வந்தார். மேடைக்கு எதிரில் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். கையை உயர்த்தியதும் கூட்டம் அடங்கியது.
“என்ன வழக்கு…?”
ஒருவர் பதில் சொன்னார்.
“இதோ நிக்கறாளே தாமரை… இவளும் இந்தப் பால்பாண்டியும் தவறா நடந்திருக்காங்க… கையும் களவுமா பிடிச்சாச்சு…”
இரத்தினவேலின் கண்கள் அந்தப் பெண்ணை ஏறிட்டன. அழுதுää பயந்துää வெட்கத்தாலும் அவமானத்தாலும் குன்றிப்போய் நின்று கொண்டிருந்தாள். வயது கண்டிப்பாக முப்பது இருக்கும். மெலிந்த தோற்றம். திருமணமாகாத முதிர்கன்னி. பால்பாண்டியின் மேல் பார்வை திரும்பியது. நாள் கூலி. திருமணமாகாதவன்தான்.
“வயசுப் பொண்ணுங்க மானத்தோட வாழ வேண்டாமா..? என்ன தைரியத்துலடா இவளை நீ தொட்டே..?”
பால்பாண்டி வியர்த்துப்போய் நின்று கொண்டிருந்தான். கிடைக்க இருக்கும் தண்டனையை நினைத்து மனது அழுதது.
ஊரில் இதுபோன்ற அத்து மீறல்களுக்குத் தண்டனை விநோதமானது. ஊர்வலமாக அவர்கள் தெருக்களில் அழைத்து வரப்படுவார்கள். வீடு வீடாக வரும்போதுää சாணிக்கரைசலையும் அழுகிய முட்டைகளையும் அவர்கள் மீது வீசி எறிவார்கள். இதுபோன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட ஆண்கள் ஊரைவிட்டே ஓடியிருக்கிறார்கள். பெண்கள் தூத்துக்கயிறை முத்தமிட்டிருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும் என்று நாட்டாமைகளால் கடைப்பிடிக்கப்பட்ட இரும்புச் சட்டம் அது.
“இவளோட அப்பா யாரு…?
“இதோ நிக்கறாரு செல்வராசு…”
முன்னே வந்து நின்ற செல்வராசுவை இரத்தினவேல் ஏறிட்டார். அவரது கண்கள் சிவந்தன.
“இவனா?
சம்பாதிக்கும் பணம் அத்தனையையும் கூத்தியா வீடுகளில் செலவு செய்பவன். வீட்டில் பெண் பிள்ளை திருமண வயதைக் கடந்து கொண்டிருக்கிறதே என்ற உணர்வில்லாமல்ää அவளுக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற அக்கறையில்லாமல் நாட்களைக் கடத்துபவன்…
தாமரை வயல் வேலைகளுக்குச் செல்பவள்தான். அவளது சம்பளத்தைச் சேமித்து வைத்திருந்தால்கூட அவளை நல்லபடியாகக் கடத்தியிருக்க முடியும். அவளது திருமணத்தைப் பற்றி யாராவது கேட்டால் ‘ஜாதகம் பார்த்தேன். நேரம் வரவில்லை’ என்று கூசாமல் சொல்லுவான்.
“ஜாதகம் பார்க்கிறேன்; ஜாதகம் பார்க்கிறேன் என்று பெண் பிள்ளைகளை வெந்தணலில் வேகவைக்கிறீர்களேடா.. ஈன முண்டங்களா…”
நாட்டாமை பொங்கி எழுந்தார்ää
“இன்னைக்குத் தண்டனை செல்வராசுக்குத்தான்… இவனைத் தெருத் தெருவா இழுத்திட்டுப் போங்க…
பொம்பளைப் பிள்ளைய காலா காலத்துல கடத்தறதுக்கு எந்த முயற்சியும் செய்யாத வெறும் பய…!  நம்ம ஊரு பொம்பளைப் பிள்ளைங்க ஒரு சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி இருக்குதுங்க… பெரிய பணக்காரப் பயலுகளா வேண்டாம்… அன்னன்னைக்கிப் பாடுபட்டு கௌரவமா வாழ்க்கை நடத்துற எத்தனையோ பையன்க இருக்காங்க… அப்படி ஒரு பையனைப் பார்த்து இந்தப் பிள்ளைக்குக் கல்யாணம் முடிக்க நினைக்காத நீ என்னடா தகப்பன்… அயோக்கிய நாயே!
டேய் பால்பாண்டி… இந்தப் பொண்ணுக்காக நான் உன்னை மன்னிக்கிறேன். அம்மன் கோவில்லவச்சி நீ இவ கழுத்துல தாலிகட்டனும். இவகிட்டே நகையோää பணமோ எதுவும் கேட்கக்கூடாது. குடும்பம் நடத்துறதுல ஏதாவது பிரச்சினை வந்ததுன்னா உன்னை விடமாட்டோம்..!”
தாமரைக்கு திரௌபதியின் மானத்தைக் காத்த கண்ணனின் நினைவு வந்தது. கதறி அழுதபடி நாட்டாமையின் காலில் விழுந்தாள்.
“நல்லா இரும்மா..”
துண்டை உதறித் தோளில் போட்டபடி நாட்டாமை படி இறங்க திருத்தி எழுதப்பட்ட புதிய தீர்ப்பை கூட்;டம் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டது.


இதயம் பேசுகிறது
25.05.2000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக