புதன், 26 டிசம்பர், 2012

கங்கை வற்றுவதில்லை






                                        கங்கை வற்றுவதில்லை

      திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் பிரமாண்டமான வெண்கல மணிகளின் நாதம் அந்த காலை நேரத்தில் கணீர் கணீர் என எதிரொலித்தது. அண்ணாமலையாரின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நின்றிருந்த சுயம்பு நாடாரின் உடம்பு சிலிர்த்தது. விரைவாகப் பிரகாரம் சுற்றினார். மலையும் அதன் ரம்மியமும்; மனதை அள்ளியது.
      மகாதேவன் ஸ்டோர் பாத்திரக்கடை தரை தெளித்து சுத்தமாகியது. பையன்கள் சுறுசுறுப்பாக பாத்திரங்களை அடுக்கினார்கள். தூசி தட்டினார்கள் தொங்க விட்டார்கள். சுயம்பு நாடார் ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு பட்டரையில் அமர்ந்தார். கடையில் கூட்டம் சேர்ந்திருந்தது.
“என்னப்பா சுயம்பு நாடார்…. நல்லாயிருக்கியா… அண்ணாமலையான் உன்னைக் கைவிடமாட்டான்பா…
சுயம்பு நாடார் அந்த எழுபது வயது மூதாட்டியின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார். மனம் விம்மியது.
“அண்ணாச்சி பழையபடி பட்டரையில் இப்படி உட்கார்ந்திருக்கிறது மனசுக்கு சந்தோஷமாயிருக்கு.”
இன்னொரு பெண்.
“உங்களுக்கு நெஞ்சுவலி கூட இருந்துதாமே… எவ்வளவு பெரிய விஷயம். தைரியமாக தாங்கிக்கிட்டீங்கää இனிமே எதுவும் உங்களை அசைக்க முடியாது அண்ணாச்சி.” கல்லூரி மாணவன் போலிருந்தவன் குரலில் மலர்ச்சி.
சாதாரண விஷயமா அது. சன்னதி கடைவீதி தீப்பிடித்து அந்த மகா மண்டபம் எரிந்து சரிந்தபோது அவரது மகாதேவன் ஸ்டோரும் பல லட்ச ரூபாய் சரக்குகளும்ää தீயின் கொடிய நாக்குகளுக்கு இரையாகிப் போயின. கனவிலும் நினையாத ஒன்று சம்பவித்து விட்டது. கடைக்கு இன்ஸ{ரன்ஸோ பேங்கில் வலுவான சேமிப்புகளோ இல்லாத நிலை. வியாபாரத்தை மனித நேயத்தோடு செய்தவர் அவர். பணம் பண்ணத் தெரியாதவர்.
எவர் இல்லையென்று வந்து நின்றாலும் இயன்றதைத் தரும் மனம். கடைக்கு வருபவர்களிடம் பரிவோடும் பாசத்தோடும் பழகும் குணம். இக்கட்டான நேரங்களில் ஓடோடிச்சென்று செய்த உதவிகள். மனித மனங்கள் மதம்ää ஜாதிää இனம் பாராமல் அவருக்காக இரங்கின.


கொழுந்து விட்டெரிந்த நெருப்பை… பெயர்ந்து விழுந்த மண்டபத்தை… கண் முன்னாலே கரியாகிப் போன அவரது நாற்பதாண்டு நிறுவனத்தை அவர் பார்த்து துடித்து ஏங்கி அழுதபோது…. எத்தனை ஆதரவுக் கரங்கள் அவரை நோக்கி நீண்டு அணைத்துக் கொண்டன. பணக்காரர்களும்… ஏழை மக்களும் அவரைச் சூழ்ந்து சொன்ன வார்த்தைகள்.
“அண்ணாச்சி பிளாங்க் செக்… எவ்வளவு வேண்ணா எடுத்துக்க. நீ நல்லா சம்பாரிச்சு தந்தா போதும்.”
முதலியார் வீட்டுப் பையன். அவன் காலில் விழலாம்போல் இருந்தது.
கிராமத்து தாழ்த்தப்பட்ட பெண் கைக் காப்புகளை கழட்டி அவரிடம் நீட்டிய அந்த தாய்மைப் பரிவு…
“என்ன வேணும் சொல் அண்ணாச்சி” என்று ஓலித்த குரல்கள்.
சுயம்பு நாடார் அவசர அவசரமாக பீறிட்ட கண்ணீரை மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்.
இதோ மகாதேவன் ஸ்டோர் மீண்டும் திடமாய் எழுந்து விட்டது. நெற்றியில் பெரிய திருநீற்றுப் ப10ச்சுடன் சுயம்பு நாடார். பழையபடி உற்சாகம்.. குதூகலம்… பெரிய அடுக்கை தராசில் வைத்து எடை பார்த்தபடி விலை சொன்னார்.
“நல்ல குத்துவிளக்கு எடு அண்ணாச்சி…”
“தர்ரேனுங்க அம்மா…”
“நாடார்… மெட்ராஸ்லேயிருந்து சரக்கு வந்திருக்கு….”
“இதோ வந்திர்றேன்பா… தம்பி குடோன் சாவியை எடுத்திட்டு வேகமாக போ… மெட்ராஸ் வண்டியை அனுப்பிரு.”
“அங்கே என்னடா பராக்கு பார்த்துக்கிட்டு? பேஸன் சப்பியிருக்கு சரி பண்ணப்பாரு”
வியாபாரப் பரபரப்பு அடங்கியிருந்தது. பேன் காற்றில் சேரில் சாய்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். நெஞ்சில் பழைய நினைவுகள்.
திருவண்ணாமலைக்கு சுயம்பு நாடார் வந்தபோது பனிரெண்டு வயது. மாமா கடையில் எடுபிடி வேலை. தினமும் மாலை வேளையில் அந்த அற்புதம் நடக்கும். கையில் விசிறி சிரட்டையுடன் அவர் வருவார். தோற்றம் தேவதூதனைப் போல் இருக்கும். சாமி எத்தனை அழகு கம்பீரம் என்று வியப்பு வரும்.
சாமி வருவதைப் பார்த்ததும் அவர் அமர்ந்து கொள்ள நாற்காலி எடுத்து போட்டு காலில் விழுந்து வணங்குவார். டீ வாங்கிக் கொடுப்பார். மக்கள் கூட்டம் அவரை வணங்கியபடி செல்லும்.
சாமியின் ஒவ்வொரு அசைவையும் சுயம்பு நாடாரின் கண்கள் அளவெடுக்கும். அவரது விழிகளில் விவரிக்க இயலாத ஒளி தெரியும். தாய்மையின்  பரிவும்ää சிங்கத்தின் கம்பீரமும் ஒருசேர இருக்கும். கூட்டம் என்னவெல்லாமோ முறையிடும்.
“இந்தப் பிச்சைக்காரன் என்ன செய்ய முடியும்.
என் தந்தை உன்னைக் காப்பாற்றுவார்”
“இந்தப் பரதேசியிடம் ஒன்றும் இல்லையப்பா”
ஒன்றுமில்லை என்றவரிடம் எல்லாம் இருந்தது. அன்பாலும்ää பண்பாலும்ää கருணையாலும் எதையும் வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர்.
கடமையைச் செய்.ää பலனை எதிர்பாராதேää என்பது அவரின் தத்துவம். அவர் செய்தது மதப் பிரசாரம் அல்ல.ää அவர் அணிந்தது மதச் சின்னமும் அல்ல.ää வேடம் புனையத் தெரியாத மகா யோகி. தவ வேடம் ப10ண்ட மகத்தான சித்தர்.
சுயம்பு நாடாரின் கண்கள் தன்னை  அறியாமலே கண்ணீரைச் சிந்தியது. அறியாமை இருளை அகற்ற வந்த பேரொளி போன்ற பெரியோரை இந்த நாடு மறந்து போய்விட்டதா?
எத்தனை கொலைகள்ää கலவரங்கள்ää வன்முறைகள்ää சீரழிவுகள். எத்தனை சுயநலம்ää அழுக்காறு… நானää; என் ஜாதிää என்ற திமிர்.ää மதம் பிடித்த மதவாதிகள்.
புத்தர்ää ராமகிருஷ்ணர்ää விவேகானந்தர்ää அன்னை தெரசா என்று எத்தனை விடிவெள்ளிகள்…. வழிகாட்டும ஒளிவிளக்குகள்… ஆனால் தேசமோ மீளாத இருளில்.
“என்ன அண்ணாச்சி.ää திகைச்சுப் போய் உட்கார்ந்திட்டீங்க”
மாந்தோப்பு பீர் முகமது.
“வாங்க… பாய்… வாங்க… பாய்”
சுயம்பு நாடார் உணர்வுக்குவர நேரம் பிடித்தது.
“என் பையன் டெல்லிக்குப் போயிருந்தான்ல… உங்களுக்கு தர்றதுக்காக இதை வாங்கிட்டு வந்தான்.”
சுயம்பு நாடார் நிமிர்ந்தார். மிகப் பாதுகாப்பான பொட்டலத்தில் ஸ்படிக சிவலிங்கம்ää நெஞ்சு நெகிழ பீர்முகமதுவை அணைத்துக் கொண்டார்.
சன்னதி கடைவீதி தீயில் பொசுங்கிப் போனபோது மனிதநேயம் அவரை அணைத்து ஆறுதல் சொன்னது. இதோ ஒரு இஸ்லாமிய சகோதரன் சிவலிங்கத்தைச் சுமந்து வந்து பெருமைப்படுத்துகிறான்.
இந்த மண்ணின் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை. சுயம்பு நாடாருக்கு தேசத்தின் மீது நம்பிக்கை வந்தது.

தேவி
29.10.97

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக