வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வேதங்களும் தத்துவங்களும்


                                     வேதங்களும் தத்துவங்களும்

            செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் மலைப்பாதை. டெம்போ டிராவலர் நல்ல பொறுத்தம். வலுவான எஞ்சின். உயரமான காற்றோட்டமான இருக்கைகள். ஸ்டீரியோவில் இருந்து புறப்பட்ட புல்லாங் குழலோசைää மொத்தம் பத்து பேர். அமிர்தபுரி நோக்கி ஒரு புண்ணிய யாத்;திரை. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துஅடர்ந்த மரங்களை10த்துச் சிரிக்கும் செடிகளைபள்ளத்தாக்கில் பாய்ந்து செல்லும் நீரோடைகளைமலையின் சரிவுகளில் வசிக்கும் மக்களை.. வீசும் குளிர்காற்றைமலையைத் தொட்டாற்போல் தவழ்ந்த மேகங்களைவியந்து பார்த்தபடி.. ஏதோ ஒரு புதிய உலகத்திற்குள் நுழைகிறோம் என்ற ஆனந்தத்தை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான் சக்கரவர்த்தி.
            மலைப்பாதை வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும் செடிகளும்தான். உயரத்தில் ஒரு சிற்றூர். பத்துப் பதினைந்து வீடுகள். நான்கைந்து தேநீhக்; கடைகள். தேன் குரலில் மலையாளம். இளம் பெண்கள் சிற்றோடைகளில் குளித்துவிட்டு தலைமுடியை மயில் தோகை போல் விரித்தபடி சென்றார்கள். தேநீர்க்கடைகளில் வள்ளிக் கிழங்கை தோலுரித்துக் கொண்டிருந்தார்கள். கடைகளில் வள்ளிக்கிழங்கு நல்ல சுவையான உணவு.
            அரைமணி நேர ஓய்வுக்குப் பிறகு வண்டி உறுமி கிளம்பியது. அமிர்தபுரிக்கு இது முதற்பயணம். அங்குதான் அம்மா இருக்கிறார்கள். மாதா அமிர்தானந்தமயி என்ற அன்னையைத் தரிசித்து வரவேண்டும் என்பது அவனது நீண்டநாள் பிரார்த்தனை.
            அம்மாவின் எளிமையும்.. சேவையும்கனிவும்.. சக்கரவர்த்தியை அவர்பால் ஈர்த்தன. அம்மா சிறு பெண்ணாக இருந்தபோதே மணிக்கணக்கில் தியானத்தில் ஈடுபட்டு இறைவனைத் தேடியவர். தனக்கென்று வாழாத வாழ்க்கை அவருடையது. துன்பப்படுபவர்களுக்கு ஆறுதலாய் இருப்பவர்.
            இந்த உலகம் முழுவதும் அவருடைய பிள்ளைகளே. இந்தப் பெண்மணிக்குள் ஒளிந்திருப்பது யார்அந்தமாயக் கிருஷ்ணணாஅல்லது அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற மாயா சக்தியாஅமெரிக்காவில் தேவாலயங்களில் அம்மாவிற்கு கொடுக்கப்படும் வரவேற்புகிறிஸ்து பிறந்த நாளில் அம்மா அனைவருக்கும் விடுக்கும் நற்செய்திகள்.. நபிகளைப் புகழ்ந்து அம்மா பேசும் வார்த்தைகள்அம்மா நீ யார்…?
            கொல்லம் வந்து கருநாகப்பள்ளியும் வந்தது. அங்கிருந்து ஒரு கிளைச்சாலை. வள்ளிக்காவு என்ற கடற்கரைக் கிராமத்தில் அமிர்தபுரி எழுந்திருந்தது. அழகான கட்டிடங்கள்பிரமாண்டமான பிரார்த்தனைக்கூடம்பல்வேறு நாட்டவர்களும் பேதமின்றி உலவும் காட்சிகள்அருமையான கடற்கரை.. அகன்ற உப்பங்களிகள்.. ஆஸ்ரமத்தில் பெரிய கோடீஸ்வரர்கள் எச்சில் தட்டைக் கழுவிக் கொண்டும்.. தரையைப் பெருக்கிக் கொண்டும்கழிவறைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள்.
            அகம் அங்கே அழிந்து கொண்டிருந்தது. ஆணவம் வெளியேறிக் கொண்டிருந்தது. சுயநலம் சிதறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் சுயபரிசோதனையில்வாழ்வின் உண்மையான நோக்கமென்ன.. எதற்காகப் பிறந்திருக்கிறோம். என்ன சாதித்திருக்கிறோம்எல்லாவிதக் கேள்விகளும் மனதை ஆக்ரமித்தன.
            பிரார்த்தனை மண்டபத்தில் பெருங்கூட்டம். அறையில் சென்று குளித்துவிட்டு வேகமாக வரிசைக்கு வந்தார்கள். சக்கரவர்த்தி அம்மாவை நெருங்கியபோது மாலை மணி நான்கு. அம்மா அவனைப் பெற்றத்தாயைப் போல் தழுவிக் கொண்டார்கள். கன்னத்தில் முத்தமிட்டார்கள்.
            “என் கண்ணு மோனேஎன்பொன்னு மோனே…” என்று கொஞ்சினார்கள்.
            “மோனுக்கு எந்து வேணும்.. பரயு..
            “என்னுள் நீ தான் வேண்டுமம்மா…”
            வழி தவறினேன். வன்மம் சுமந்தேன்.. லட்சியங்களும் இலக்குகளும் இல்லை. மூன்று நேரச்சாப்பாடு. நல்ல தூக்கம். பொழுதுகள் புலர்ந்தன. அடைந்தன.. என்னையே நான் அறியவில்லை அம்மா.. மனம் அம்மாவிடம் பேசியது.
            அம்மா கனிவான பார்வையால் அவனை அளந்தார். மீண்டும் குழந்தையாய் அணைத்துக் கொண்டார்.
            “அம்மை எல்லாந் தரும்..
            அம்மா அவனிடம் ஆருடமும் சோதிடமும் சொல்லவில்லை. அருள்வாக்கு சொல்லவில்லை. பில்லி சூனியம் பற்றி பேசவில்லை. பணம் காசு கேட்கவில்லை. அவள் திருவிழியால் அவனுள் அகல் விளக்கை ஏற்றி வைத்தாள்.
            அம்மாவின் தரிசனம் சக்கரவர்த்திக்கு ஒரு அருட்கொடை. அவனையே அவன் சீர்தூக்கி பார்த்தான். எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதான ஒரு அலசல். விரைவில் மதுபானமும்ää சிகரெட்டும் அவனை விட்டு அகன்றன. எல்லாப் பெண்களையும் கண்ணியத்தோடு பார்த்தான். விபச்சாரப் பெண்களைக் கூட ஒரு தாயாகப் பார்க்கக் கூடிய பண்பு வந்தது.
            ஆஸ்ரமத் துறவிகள் கடைப்பிடித்த உணவுக்கட்டுப்பாடுகள் அவனைச் சிந்திக்க வைத்தது. அரிசிக் கஞ்சியும் உருளைக்கிழங்கும்தான் அவர்களின் முக்கிய உணவு. சாப்பாட்டுக்கு அங்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பிறருக்கான அர்ப்பணிப்பு.. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்.. இல்லாதவர்களுக்கு கொடுக்கும் குணம்இவைகள்தான் ஆஸ்ரமத்தின் நெறிமுறைகள்.. அன்று எடுத்த முடிவுதான்உயிர்களைக் கொன்று தின்னும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அது பெரிய பாவமாக உணர்ந்தான். கதறக் கதற ஆடுகளின் கழுத்தை அறுப்பதுரத்தம் வேறு குடல் வேறு என்று வறுத்துத்தின்பது.. நமக்கு இது வேண்டாம்..
            வீட்டில் அவனுக்காகத் தனி சமையல். பிள்ளைகள் அப்பாவை மிரட்சியோடு பார்த்தார்கள். தினமும் பொறித்த கறியும் வறுத்த மீனுமாய் சாப்பிட்ட மனுஷனுக்கு எப்படி இந்தத் திடன் வந்தது. அவர்களை அவன் கட்டாயப்படுத்தவில்லை என்றாவது ஒருநாள் உயிர்கொலை பற்றி அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் இருந்தது. நாட்கள் சுழன்று கொண்டிருந்தன.
            அன்று கிராமத்தில் இருக்கும் தாயைப் பார்த்து வரவேண்டும் என்று காரில் புறப்பட்டான். தாய்க்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல். தூத்துக்குடியில் தன்னோடு வந்து இருக்கும்படி எத்தனையோ முறை வற்புறுத்தியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.
            “இந்த ஊரையும் வீட்டையும் என்னால மறந்து வரமுடியாதுப்பாஇந்த வீட்டுலதான் நீங்க எல்லாரும் பிறந்து வளர்ந்தீங்க... இங்கதான் என் ராசனோடு நான் வாழ்ந்தேன்.. இது தான் எனக்கு கோவில்என் மூச்சு இங்கதான் அடங்கணும்..வயதானால் பெரியவர்கள் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள். பிடிவாதம் பிடிக்கிறார்கள். சக்கரவர்த்தி தாய்க்கு ஒரு குறையும் வைக்கமில்லை. அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்தான். வாரம் ஒருமுறை அம்மாவைப் பார்த்து.. பேசிச் சிரித்துஅவள் கையால் சாப்பிட்டுஇதில் அவன் தவறியதே இல்லை.
            வீட்டு வாசலில் அம்மா அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள். முதுமையால் நைந்து போன உடம்பு. கண்பார்வை மங்கி இருந்தது. நடையில் தள்ளாட்டம். காரில் இருந்து இறங்கியதும் அம்மாவைக் கட்டிக்கொண்டான். தான் கொண்டு வந்திருந்த ஆப்பிள் பழங்களையும் கார வகைகளையும் அவளிடம் கொடுத்தான்.
            அம்மா.. இனியவளே.. எப்படி வளர்த்தாய் என்னை.. ஒரு சிறு துரும்பு கூடவிழுவதற்கு அனுமதிக்க மாட்டாயேஎன்னை வளர்த்து ஆளாக்கியதை தவிர என்ன சுகம் அனுபவித்தாய்
            அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தோட்டத்திற்கு கிளம்பனான். தோட்டத்தில் தென்னை மரங்கள்மாமரங்கள்பனை மரங்கள் இருந்தன. ப10ர்வீகச் சொத்து.
            மதியம் வீட்டிற்கு வந்தபோது நல்ல பசியாக இருந்தது. அம்மாவின் கைவண்ணம் நன்றாக இருக்கும். பருப்புக் குழம்பின் மணம் அவள் குழம்பு வைத்தால்தான் கிடைக்கும்.
            “வாப்பாசாப்பிடுநீ ஆசைப்படுவேன்னு குதிப்பு மீன் வாங்கி குழம்பு வச்சிருக்கேன்…” சக்கரவர்த்தி திடுக்கிட்டான். அம்மாவுக்கு தளர்ச்சியோடு மறதியும் சேர்ந்து கொண்டது போலும். அவன் இப்போது அசைவம் சாப்பிடுவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். மறதியாலும் நினைவு தடுமாற்றலாலும் மீன் குழம்பு வைத்திருக்கிறாள். இதை சாப்பிடமாட்டேன்.. என்று சொல்லி விடுவதாசொல்லிவிடலாம்.. இன்னும் அரைமணியில் பருப்பை வேக வைத்துத் தந்து விடுவாள்.. அந்த தளர்ந்த கரங்களுக்கு வேலை தர வேண்டுமா.. சாப்பாடு வேண்டாம்…. வயிறு சரியில்லை என்று சொன்னால்.. அவள் கஷ்டப்பட்டு சமைத்ததற்கு மரியாதை இல்லாமல் போய்விடும். அல்லது மகன் சாப்பிடவில்லையே என்று வருத்தப்படுவாள். ஏன் மீன் வாங்கி சமைத்தாய் என்று அவளிடம் கேட்டால் வேதனைப்படுவாள்.
            அவனுக்கு அவன் கடைப்பிடித்த தர்மம் முக்கியமானதாகத் தோன்றவில்லை. தாயே முக்கியமானவளாகத் தோன்றினாள். தாய் எடுத்து வைத்த சாப்பாட்டை மறு வார்த்தை பேசாமல் சாப்பிட்டான். அவள் மனம் நிறைந்ததைப் பார்த்து பரவசப்பட்டான். அன்னையே தெய்வமாகும் என்பது அவன் அறிந்த முதல் தத்துவம். வேதங்களும்தத்துவங்களும்.. தவங்களும்தாய்க்குப் பிறகுதான்.. என்று தாய்மையுள்  நிறைந்து போனான்.

தேவி
19.01.2000

1 கருத்து: