சனி, 29 டிசம்பர், 2012

பேசாத இதழ்கள்


                                        பேசாத இதழ்கள்
மாலையில் பெண் பார்க்கச் செல்ல வேண்டும். அலுவலகத்தில் ராகவன் இனம்புரியாத உற்சாகத்தில் இருந்தான். உதவியாளர்களிடம் கலகலப்பாக பேசினான். இந்த இருபத்தேழு வயதில் தன்னோடு கைகோர்க்க வரும் அந்த வசந்தத்தை நினைக்க நினைக்க இனித்தது.
தன்னை முதல் முதலில் பார்க்கும் போது அவளது முகபாவங்கள் எப்படியெல்லாம் மாறும்…? அவளது பவழ விழிகள் என்ன கதையெல்லாம் பேசும்…? நினைவு நித்யாவை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. ‘மைடியர் நித்யா.. நீ எப்படி இருப்பாய்… நீயும் என்னைப் போல கற்பனை உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருப்பாய்… இனிய கனவுகளைச் சுமந்து கொண்டிருப்பாய்…!’
வாலிபம் அரும்பி இத்தனை வருடங்களில் ராகவனுக்கு பெண்களிடம் பழக்கம் வைத்துக் கொள்வது உடல் நடுக்கம் பிடித்த விஷயம். குடியிருந்த தெருவில்ää அலுவலகத்தில்ää பொது இடங்களில் பல ஜோடி கயல் மீன் கண்கள் அவனிடம் கதை பேசியிருக்கின்றன. அப்போதெல்லாம் உடம்பு சிலிர்க்கும். இளமையும்ää துடிப்பும் மிக்க இளைஞனான அவன் பெண்களைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. ஆனால் அவனிடம் கண்ணியமும்ää கட்டுப்பாடும் இருந்தது.
அவனுக்குத் திருமணப் பேச்சு துவங்கியதும் வந்திருக்கும் முதல் வரனே நித்யாதான். நித்யாவின் குடும்பம் பற்றி அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த வீட்டுப் பெண் வருவதற்கு கொடுத்து வைத்திருக்க வெண்டும் என்று அபிப்ராயப்பட்டாள். நித்யாவுக்கு பள்ளியில் ஆசிரியை வேலை. நல்ல குணம் என்று கேள்வி.
அவள் எப்படி இருப்பாள் என்று யாரும் சொல்லவில்லை. ஜாதகம் பொருந்தி வந்தது. பெண்ணும் பிடித்திருக்க வேண்டும். ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது அழகாக இருக்க வேண்டும். இன்னும் சில மணி நேரங்கள்… ராகவன் காத்திருக்க சங்கடப்பட்டான்.
பள்ளியில் நித்யாவுக்கு காலையில் இருந்தே படபடப்பாய் இருந்தது. இதுவரை தன்னைப் பெண் பார்த்து விட்டுச் சென்றவர்கள் பத்து பேர் இருக்கும். ஒருவருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. “சகுனம் சரியில்லை… தெய்வ சம்மதம் இல்லை” என்று சுலபமாய்த் தட்டிக் கழித்து விட்டார்கள். தான் சற்று ஒடிசலாய் இருப்பதுதான் அவர்கள் நிராகரிப்புக்குக் காரணம் என்பது நன்றாகப் புரிந்தது.
வந்தவர்கள் ஒவ்வொருவரும் மறுத்துவிட்டு சென்றதால் சற்றேமெலிந்த உடம்பு மேலும் வாடியது. தான் கரை சேருவேனோ மாட்டேனோ என்ற பயத்தில் மனதும் உடலும் ஒரு சேர சோர்ந்தது.
இன்று வர இருக்கும் வரனுக்கும் தன்னைப் பிடிக்கிறதோ என்னவோää பெண் பார்க்க வருபவர்கள் டாக்ஸியில் அமர்க்களமாய் வருவதும் பதில் சொல்லாமல் சென்று விடுவதும் அவர்களைப் பொறுத்த வரை சாதாரணமானது தான். ஆனால் தெரு முழுக்க பெண்கள் இதை ரகசியமாகப் பேசி முணு முணுக்கும் போது மனது ரணமாகிப் போகும். திருமணமே வேண்டாம் என்று கூட சொல்லிப் பார்த்தாயிற்று. பெற்றோர் கேட்பதாக இல்லை.
மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த எண்ணம் வந்தது. இன்று வரவிருக்கும் ராகவன் கம்பெனி விலாசம் தெரியும். அவனை நேரில் சந்தித்து விட்டால் என்ன… சந்தித்து… தன்னைப் பெண் பார்க்க வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் குறைந்தபட்சம் தெருவாசிகளின் முணுமுணுப்பையாவது தவிர்த்து விடலாமே! எதற்கு தேவையில்லாத வேதனையும் அவமானமும்? தான் திட்டமிட்டது சரியென்றே தோன்றியது.
நித்யாää ராகவனின் அலுவலகத்தை அடைந்தபோது மாலை மூன்று மணி. அவனது பிரத்யேக அறை ‘ஏசி’ செய்யப்பட்டிருந்தது. பிய10ன் நீட்டிய வெள்ளைக் காகிதத்தில் தன் பெயர் விலாசத்தை எழுதினாள். பிய10ன் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ராகவனே எழுந்து வந்து அவளை வரவேற்றான்.
நாற்காலியில் அவளை அமருமாறு கேட்டுக்கொண்டு தானும் அமர்ந்து அவளையே மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். உடல் மெலிந்திருந்தாலும் அவளது முகத்தில் லட்சுமி கடாட்சம் இருந்தது. தலையில் சூடியிருந்த மல்லிகைச்சரம் தோளுக்கு மேலே குவிந்து அந்த முகமலருக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. கண்களும்ää மூக்கும் சர்வ லட்சணமாய் இருந்தது. அவன் அவளை ஆராய்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அவளது விழிகளும் படபடப்பாய் அவனை எடை போட்டுக் கொண்டிருந்தன.
மாநிறத்தில் நல்ல உயரமாய் கட்டுக்கோப்பான உடல்வாகுடன் கம்பீரமாய் இருந்தான். இவனுக்கு நிச்சயமாய்த் தன்னைப் பிடிக்கப் போவதில்லை… வந்தது நல்லதாய்ப் போயிற்று. அவனது கம்பீரத்துக்கு முன் நாமெங்கே..?
ராகவனுக்கு அவள் மீது பரிவே தோன்றியது. நாற்காலியில் அமர்ந்திருக்கவே அவள் சங்கடப்படுவது போல் தோன்றியது நேரடியாக வந்திருக்கிறாள். எதற்காக இருக்கும்? அவனை அதிக நேரம் யோசிக்கவிடாமல் அவள் பேச்சைத் துவங்கினாள்.
“இன்றைக்குப் பார்க்கப் போற பெண் இவ்வளவு மோசமா இருப்பாண்ணு நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க… என்ன செய்யறது…? மனசு நல்லா இருந்தாதானே உடம்பு நல்லா இருக்கும். என்னை இதுவரைக்கும் பத்து பேரு வந்து பாhத்திட்டு போயிட்டாங்க சார்ää ஒருத்தருக்குமே பிடிக்கலை.”
“அதன்பின் வார்த்தைகள் வர நேரம் பிடித்தது. உதடுகள் துடித்தது. கண்கள் நீர் கோர்த்தது. சிரமத்துடன் பேசினாள்.
“நான் அழகில்லே போலிருக்கு…. வேண்டானுட்டாங்க… ஆண்கள் மனசுல சினிமா ஸ்டார் மாதிரி மனைவி அமையணும்னு எண்ணம் வந்தாச்சு. யாரையும் தவறா சொல்லலை சார்… ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு மாதிரி கனவு இருக்கும்… அதுக்காக அவங்களை குற்றம் சொல்ல முடியுமா? இப்ப நான் வந்தது… நீங்க என்னை நிராகரிக்கக் கூடாதுன்னு கேட்டுக்கறதுக்கு இல்லே சார்… நீங்க வர வேண்டாம்னு சொல்றதுக்காகத்தான்.
பத்து பேர் பார்த்திட்டுப் போயாச்சு… ஒவ்வொரு தடவையும் நெருப்பை அள்ளி தலையிலே போட்டுக்கற மாதிரி இருக்கு. சும்மா சும்மா எதுக்கு சார் வந்து பார்த்திட்டு ஏமாந்து போகணும்…?
முந்தானையால் கண்களைத் துடைத்தபடி மேலும் பேசினாள்.
“என்னோட வலி எனக்குத் தான் சார் தெரியும். அதனால வீட்டுல இனி எந்த வரனைப் பார்த்தாலும் நேர்ல போயி அவங்களை வர வேண்டாம்னு கேட்டுக்கப் போறேன். எனக்கு எப்ப விடியுதோ அப்ப விடியட்டும். இல்லேன்னா விடியாமலே போகட்டும்.”
அவள் மீண்டும் அழுதாள். அவசர அவசரமாக முகத்தைத் துடைத்தாள். அந்நிய ஆடவனின் முன்னால் உணர்ச்சி வசப்பட்டு விட்டோமே என்று இருந்தது அவளுக்கு… “உங்க நேரத்தை வீணாக்கி தொல்லை கொடுத்திட்டேன்… மன்னிச்சிருங்;க சார்…..!”
“ராகவன் அவளுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு வந்தான். மீண்டும் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தினான்.
மாலையில் நித்யா வெகு சாதாரணமாக வீட்டுக்குப் புறப்பட்டாள். பெண் பார்க்கும் படலம் இன்று கிடையாது நிம்மதி. வீட்டை அடைந்ததும் அம்மா கத்தினாள்.
“ஏண்டி அறிவில்லே…? மணி ஜந்தைத் தாண்டுது… அவங்க எப்ப வேண்ணாலும் வந்திரலாம். இவ்வளவு பொறுப்பில்லாம தாராளமா வந்திருக்கே. முகத்தைக் கழுவி பட்டுப் புடவையை உடுத்தி தயாரா இருடி… உன்னையும் பெத்தேன் பாரு….”
நித்யா சிரித்துக் கொண்டாள். பாவம் அம்மா. இன்று அவர்கள் வரப்போவதில்லை என்பது அவளுக்குத் தெரியாது. ஏமாந்து போவாள். இரவு எட்டு மணி வரைக்கும் அம்மாவும் அப்பாவும் காத்திருந்து காத்திருந்து அலுத்துப் போனார்கள். நித்யா ரசம் ஊற்றி கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொண்டாள். ராகவனின் நினைவு வந்தது. எவ்வளவு கம்பீரமான கனிவான தோற்றம். அவனைக் கணவனாக வாய்த்தவள் கொடுத்து வைத்தவள்தான்.
இரண்டு நாளில் நித்யாவின் தகப்பனாருக்கு அந்தக் கடிதம் வந்தது. ராகவன்தான் எழுதியிருந்தான். பெண் பார்க்க வரவிருந்த நாளில் எதிர்பாராமல் நித்யாவைச் சந்தித்ததையும் அவளை அங்கேயே பிடித்துப் போயிற்று என்றும் எழுதியிருந்தான். முகூர்த்த தேதிகளை பேசி ஒழுங்கு செய்ய தனது தந்தை ஓரிரு நாளில் அங்கு வர இருப்பதையும் குறிப்பிட்டிருந்தான்.
நித்யாவின் தகப்பனாருக்கு நெஞ்சு விம்மியது. கடிதத்தை மனைவியிடம் படிக்கவே அவரால் முடியவில்லை. விஷயம் தெரிந்ததும் அவரது மனைவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். “குழந்தைக்கு உடனே சொல்லி விட்டு வந்திருங்கோ…!” நிலைகொள்ளாமல் கணவனை விரட்டினாள். அவர் நித்யாவின் பள்ளிக்கு ஆட்டோவில் விரைந்தார்.
கடிதத்தைப் படித்ததும் நித்யா கேவி அழுதபடி தந்தையை அப்படியே கட்டிக் கொணடாள். இது எப்படி சாத்தியம் என்று அவளுக்கு விளங்கவே இல்லை.
‘ராகவன் எனது வருங்காலக் கணவனா…? தாயே… ராஜேஸ்வரி… அது நிஜம் தானா?’ குலுங்கிக் குலுங்கி அழுத மகளை தகப்பனார் ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தார்.
ராகவன்  நித்யா திருமணம் தடபுடலாக நடந்து முடிந்திருந்தது. நித்யாவின் தந்தை பணத்தை தண்ணீர்ராய் செலவு செய்திருந்தார். வரதட்சணை என்று மாப்பிள்ளை வீட்டார் வாய் திறக்காதது அவருக்கு பிரமிப்பாக இருந்தது. தன்னால் எவ்வளவு முடியுமோ அத்தனையும் மகளுக்கு சிறப்பாக செய்திருந்தார். தெரு முழுக்க நித்யாவுக்க வாய்த்த அதிர்ஷ்டம் குறித்தே பேச்சாக இருந்தது. “நித்யாக்கா மாப்பிள்ளை ஜோரா இருக்கார்டி…” தெருப்பெண்கள் அவள் காதுபடவே பேசினார்கள்.
முதலிரவு அறை. கையில் பால் டம்ளருடனும் கண்களில் கண்ணீருடனும் ராகவனை நெருங்கிய நித்யா டம்ளரை கீழே வைத்து விட்டு அவனை வணங்கää மென்மையாக அவளைப் பற்றித் தூக்கி மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“எதுக்கு அழணும்…”
“எனக்காக இரக்கப்பட்டுத் தானே கட்டிக்கிட்டீங்க…. இதப்பாருங்க… நான் தெய்வத்தை இதுவரை நேர்ல பார்தததில்லே. இப்ப நேர்லேயே பார்க்கிறேன்.” கண்ணீரால் அவன் மார்வை நனைத்தாள். அவளை ப10ப்போலதழுவிய ராகவனின் மனது நிரம்பிப் போய் இருந்தது. கல்யாண வயது ஏற ஏற பெண்களின் உடம்பும் மனதும் பலகீனப்பட்டுவிடும் என்பது எவ்வளவு அனுதாபத்திற்குரியாது. நித்யா இன்னும் சில நாட்களில் ப10ரித்துப் போய்விடுவாள்.
நம்பிக்கை இழந்திருந்த அவளை மணந்தது பெருமையாகவும்ää கவுரவமாகவும் இருந்தது.
நித்யா மீண்டும் ஏதோ சொல்ல உதடுகளைப் பிரித்தபோது ராகவனின் இதழ்கள் அவைகளைப் பேசவிடாமல் கவ்விக் கொண்டன.

தேவி
15.05.91

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக