வெள்ளி, 20 ஜூலை, 2012

மீண்டும் ஒரு பயணம் வரும்…


மீண்டும் ஒரு பயணம் வரும்

            திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்ட விஜயராகவனுக்கு உயரமான கோவில் கோபுரம் தெரிந்தது. முருகாபயபக்தியோடு கன்னங்களில் போட்டுக் கொண்டான். லெதர்பையை தோளில் போட்டுக் கொண்டு சூட்கேஸை கையில் தூக்கிக் கொண்டான்.
            “இரண்டு ருபா கொடுங்க சார் நான் தூக்கிட்டு வர்ரேன்…”
            அழுக்கடைந்த உடையில் கூலிக்கார பையன்.
            “சூட்கேஸை மட்டும் தூக்கிக்கோ…” நடந்தார்கள். டாக்ஸி ஸ்டாண்டில் பழைய மாடல் அம்பாஸிடர்கள் நிறைய இருந்தன.
            “வாங்கசார்கோவிலுக்குதானே போகணும்?”
            “இல்லேகானத்துக்குப் போகணும்.. எவ்வளவு வேணும்?”
            “நூறு ருபாய் ஆகும் சார்
            காரில் ஏறிக்கொண்டான். பெட்டியைத் தூக்கி வந்த பையனிடம் ஜந்து ருபாயை நீட்டினான்.
            “சில்லரை இல்லே சார்…”
            “வச்சிக்கோ
            கார் நகர்ந்தது. சிறுவனின் கண்களில் பிரமிப்பு. கார் சென்ற பாதை நெடுகிலும் பனை மரங்களும் உடை மரங்களும் தான். அங்கங்கே செழுமையான தென்னந் தோப்புகள். காயாமொழியிலிருந்து வடக்கே வரும்போது சிகப்புக்கலரில் மணல் மேடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எழுந்தும்ää தாழ்ந்தும் மணல் குவியல்கள் அற்புதமாய் இருந்தன. அந்தச் செம்மண் தேரியிலும் பசுமையாய் தழைத்து நின்றன கொல்லாமரங்கள். காற்று வீசும் போது பொடிமணல் காற்றோடு கலந்து மேனியை வருடியது. கானம் பள்ளத்தில் இருந்தது. நெருங்கவும் டிரைவர் கேட்டான்.
            “எந்த தெரு சார்…!
            ‘விசாரிக்கணும்நாராயணசாமி கோவில் பக்கத்துலதான் வீடு…”
            டிரைவர் கும்பலாய் ஓடிவந்த சிறுவர்களைக் கோட்டான்.
            “நாராயணசாமி கோவில் எங்கல இருக்கு?
            “நேரா போட்டு…”
            கார் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க சிறுவர்கள் ஹோ என்று கூச்சலிட்டபடி பின்னாலேயே ஓடி வந்தனர். காவி சுவரைப் பார்த்ததும் நாராயணசாமி கோவில் தெரிந்தது. டிரைவருக்குப் பணம் கொடுத்துவிட்டு விஜயராகவன் இறங்கிக் கொண்டான். கார் திரும்பிச் செல்லும் போது நிறைய புழுதி கிளம்பியது. தெருவில் ஆண்களும்ää பெண்களுமாய் கும்பல் சேர்ந்திருந்தது. வந்த நபர் யார் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. ஜன்னல்களில் மலர்களாய் வயசுப் பெண்களின் முகங்கள்.
            “கண்ணபிரான் அவங்க வீடு எது தம்பி?”
            “அதோ இருக்குல்ல அதுதான்…”
            அவர்கள் கோரஸாகப் பதில் சொன்னார்கள். நினைவுக்கு வந்து விட்டது. முன்பு பத்து வயது சிறுவனாய் இருக்கும் போது பார்த்த அழி பாய்த்த வீடு அப்படியே இருந்தது. பெயிண்ட் கூட அதே பச்சை கலர்தான். இந்த பதினைந்து வருட இடைவெளியில் தெருவில் நிறைய மாடிவீடுகள் தோன்றியிருந்தன. வீட்டை நெருங்கினான். கதவு உள்பக்கம் ப10ட்டியிருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து நடுவயதில் ஒருத்தி வெளியில் வந்தாள்.
            “யாரைப் பார்க்கணும்?”
            “நான் மெட்ராஸ்லே இருந்து வந்திருக்கேன். சௌந்திரபாண்டியன் அவங்க மகன்…” “அட நம்ம தம்பியாஅடையாளமே தெரியலேப்பாää உங்க மாமா தோட்டத்தில் இருப்பாக. அத்தை காலையில்தான் காயாமொழிக்கு புறப்பட்டுப் போனா. பொட்டப்புள்ளதான் வீட்டுல இருக்கும். பொன்மணிபொன்மணி ஏ புள்ளேய்மெட்ராஸிலே இருந்து உங்க மச்சான் வந்திருக்கான்கதவைத்திற புள்ளேய்
            கொலுசுக் கால்கள் விரைந்து வரும் ஜல் ஜல் சப்தம். கதவைத் திறந்தவள் தூக்கிச் சொருவிய பாவாடையை இறக்கி விட உணர்வில்லாமல். வாங்க அத்தான்என்றாள்.
            கால்கள் சந்தனக் கடைசலாய் மொழு மொழு என்றிருந்தன. அவனது பார்வை படர்ந்த இடத்தை உணர்ந்து சரேலென பாவாடையை இறக்கிவிட்டு உள் அறையில் மறைந்து கொண்டாள். மெட்ராஸ்ல இருந்து மச்சான் வந்திருக்கான் என்று பக்கத்து வீட்டுக்காரி போட்ட கூச்சலால் கைவேலையாய் இருந்து ஓடி வந்தவளுக்கு பாவாடையை இறக்க மறந்தது வெட்கமாக இருந்தது.
            முன்னறையில் அமர்ந்து கொண்டான். சுவரில் வரிசையாய் போட்டோக்கள். பெரிய சைஸில் சுவர்க்கடிகாரம். காமராஜரின் படம் போட்ட திருமகள் காலண்டர். பெண்களும்ää ஆண்களுமாய் ஒன்றிரண்டுபேர் அழிக்கம்பிகள் வழியே உற்றுப் பார்ப்பதும் போவதுமாய் இருந்தனர்.
            நின்றிருந்த ஒன்றிரண்டு கிழவிகள் மெட்ராஸ்ல பெரிய பணக்காரரும்பாவள அவிய மவனா?” என்று வியப்பை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டார்கள். உள் அறைவாசலில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த திரைச்சீலையின் அடியில் மீண்டும் கொலுசுகள் சப்தித்தன. ஒரு கையால் திரைச்சீலையை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டு பால் தம்ளர் நீண்டது. எழுந்து சென்று தம்ளரை வாங்கிக் கொண்டான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுவயதில் அப்பாவோடு வந்திருந்தபோது பொன்மணி என்ன பேச்செல்லாம் பேசுவாள். அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேற்கில் இருக்கும் தேரியில் வழுக்கி விளையாடுவதும் கொல்லாம் பழங்களை காவல்காரனுக்கு தெரியாமல் பறித்துத் தின்பதும் தான் அவர்கள் பொழுது போக்காக இருக்கும். பம்புசெட் தொட்டியில் இருவரும் நேரம் தெரியாமல் நீச்சலடிப்பாhர்கள். அப்போதெல்லாம் வராத வெட்கம் இப்போது வந்திருக்கிறது. திரைச்சீலையருகே மீண்டும் வளையல்கள் குலுங்கின.
            “மாடி ரூம்ல பெட்டிய கொண்டு வச்சிட்டு குளிச்சிட்டு வாங்கடிபன் ரெடியா இருக்கும்…”
            “மாடி ரூமுக்கு வழி தெரியாது…”
            “பழைய வழிதான்…”
            சிரித்துவிட்டு சமையல்கட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள். மாடி ஓடு போடப்பட்டிருந்தது. நல்ல விசாலமான அறைமேற்கிலும் கிழக்கிலும் ஜன்னல்கள்.. ஜன்னல் கதவுகளைத் திறந்தான். ஜிலுஜிலுவென வேப்பங்காற்று. பாண்டிலிருந்து லுங்கிக்கு தாவினான்.  குளியலறையில் வெந்நீர் பக்குவமாக விளாவி வைக்கப்பட்டிருந்தது. அழகான பிளாஸ்டிக் கிண்ணத்தில் சிறு பயத்தம்மாவு. தலை உடலெங்கும் சிறு பயத்தம்மாவைத் தேய்த்துக் குளித்தான். உடல் மணத்தது. உடை மாற்ற மாடிக்கு வந்தபோது எண்ணைää கண்ணாடிää பவுடர் சீப்பு எல்லாம் ஒரு சிறிய மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. தலையை ஈரம் போகத் துவட்டியபின் எண்ணெயை லேசாகத் தேய்த்துக் கொண்டான். சிகை அலங்காரம் முடிந்து கீழே வந்தபோது பொன்மணியின் தேன்குரல் மீண்டும் கேட்டது.
            “சாப்பாட்டறையிலே பாய் போட்டிருக்கேன்எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்வச்சி சாப்பிடுங்க…”
            போய் அமர்ந்தான். தட்டில் மல்லிகைப் ப10வாய் இட்டலிகள். ஒரு கிண்ணத்தில் சட்டினி இன்னொன்றில் சாம்பார். மெதுவாகச் சாப்பிடத் துவங்கினான். அவளை லேசாக சீண்டிப்பார்க்க மனது கணக்குப் போட்டது.
            “மிளகுப் பொடியும் நெய்யும் வேணும்”.
            கொஞ்ச நேரத்துக்கு பதில் இல்லை.
            பொன்மணிக்கு காயாமொழிக்குச் சென்றிருக்கும் தாயின்மேல் எரிச்சலாக வந்தது. எப்படி வெட்கமில்லாமல் அத்தை மகனுக்குப் பரிமாறிஉபசரித்து.. எல்லாம் செய்ய முடியும். இன்றுதானா அம்மா புறப்பட்டுப் போக வேண்டும்.
            “என்ன பதிலையே காணோம்..!
            “செல்பிலே இருக்குஎடுத்துப் போட்டுக்கோங்க…”
            என்னää ஒங்க திருமுகத்தை கொஞ்சம் காண்பிக்கக் கூடாதாவிருப்பம் இருந்தா எடுத்து வந்து வையிநான் எழுந்து போகப் போறதில்லை…”
            “சாம்பார் சட்டினி நல்லாத்தான் இருக்கு சாப்பிடுங்க…”
            “இரண்டு இட்டலிக்கு மேல சாப்பிட முடியலே. மிளகுப் பொடியினா பத்து கூட சாப்பிடுவேன்…”
            “அப்படி அதிகமா சாப்பிடக் கூடாதுஉடம்பு கெட்டுப் போயிரும்…” சிரித்துக் கொண்டே சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்ததும் முன்னறை சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்து சாய்ந்து கொணடான். காலையில் சிறிது நேரமே பார்த்த பொன்மணியின் ப10ரண அழகை மனது நினைத்து அசை போட்டது. சென்னையில் அம்மா சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன.
            “பொன்மணி எட்டுவரைக்கும் தான் படிச்சிருக்காஅதுதான் யோசிக்;க வேண்டியதாயிருக்குஇந்தக் காலத்துல குறைஞ்சது ஒரு பி.ஏ.வாவது படித்திருக்க வேண்டாமா? தம்பிக்கு சிட்டியிலேயே நல்ல படிச்ச பொண்ணா பாத்திரவேண்டியதுதான்பரத நாட்டியம்வீணை இதெல்லாம் கூட தெரிஞ்சிருக்கணும்…”
            அம்மாவின் விருப்பத்தை அப்பா மறுத்துப் பார்த்ததில்லை. படித்தப் பெண்களின் ஜாதகத்தை அலசிக் கொண்டிருக்கிறார். வாசலில் மொபெட்டின் கரகர சத்தம். மாமா வந்துவிட்டார். விஜயராகவனை பார்த்ததும் முகம் மலர்ந்தார்.
            “இப்பதான் கண்ணு தெரிஞ்சதா ராகவா…? அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றவில்லை. எல்லோரைப் பற்றியும் விசாரித்தார். என்ன விஷயமாக வந்திருக்கிறான் என்று கேட்கவில்லை. கேள்வி முகத்தில் இருந்தது.
            “பத்து நாள் இருந்து போலாம்லே…?
            “ஆறுமுகநேரியில் ஒரு கல்யாணம் இருக்கு. திருச்செந்தூர் போயி சாமி கும்பிட்டுட்டு வரணும்நாலு நாள் இருப்பேன் மாமா…”
            விஜயராகவன் எம்.ஏ.படித்துவிட்டு தகப்பனாரோடு வியாபாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டதுஅமைதியான அவனது குணம்எதையுமே ஆழ்ந்து சிந்தித்து நிதானமாக பேசும் பேச்சுஎல்லாம் மாமாவுக்குத் தெரியும். வசதியான நிலையில் இருக்கும் தங்கை மகன் பனங்காட்டுக்குள் இருக்கும் இந்தக் கிராமத்தில் பிறந்து எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் தனது மகளை மணப்பது என்பது கற்பனையில் மட்டும்தான் சாத்தியம். வாசலில் வாய் நிறைய பல்லாக மாணிக்கம்.
            “மச்சான் வந்ததை கேள்விப்பட்டேன்..
            சுகமா இருக்கியளாமச்சான்..!
            அவனது விநோத உருவத்தைப் பார்த்து விஜயராகவனுக்கு சிரிப்பு வந்தது. முன் பற்கள் தூக்கலா இருக்க உடம்பு நோஞ்சானாக இருந்தது. சட்டையில்லாத வெற்றுடம்பில் எலும்புகள் தெரிந்தன. கலர் மங்கிப் போன பழைய சாரத்தை பனம் நாரால் இறுகக் கட்டியிருந்தான். நெற்றியில் பளீச்சென்று திருநீற்றுப் ப10ச்சு..
            “ராகவா இதுவும் ஒரு மாமன் மகன் தான்.. ஆள் பார்க்க ஒரு மாதிரி இருப்பான்ஆனா கெட்டிக்காரன்சோப்பு கம்பெனில வேலை.. நம்பகுடும்பத்து மேலே எப்பவும் பாசமா இருப்பான். உங்கப்பா வந்தா இவனைப் பார்க்காம போக மாட்டாங்க…”
            மாணிக்கம்  மச்சானைப் பார்த்து களங்கமில்லாமல் சிரித்தான்.
            “டேமச்சான் நாலு நாள் தங்கப் போகுது.. கம்பெனிக்கு லீவு போட்டுரு.. மச்சானைக் கூட்டிகிட்டு காடு கரையெல்லாம் போயி காமிக்கணும் என்ன…” அவன்ää தலையை ஆட்டினான். மாமா எழுந்து உள்ளே செல்ல விஜயராகவன் மாடிக்கு வந்தான். அவனைத் தொடர்ந்து மாணிக்கமும் படிகளில் ஏறும் போது லேசாக தலை நீட்டிய பொன்மணியைப் பார்க்க முடிந்தது.
            “எக்கோவ் மச்சானைப் பாத்தியாஎன்னா அழகு…” அவன் வார்த்தைகள் நிச்சயம் மாடிக்கும் கேட்டிருக்க வேண்டும். பொன்மணி மாணிக்கத்தைக் கை காட்டி கூப்பிட்டாள்.
            “என்னக்காமச்சானுக்கு முறுக்கு அதிரஸம் எதுவும் கொண்டு போணுமா?..
            “நறுக்…” என்று தலையில் குட்டினாள்.
            “அதிகப் பிரசங்கித்தனமா பேசக்கூடாது என்ன…”
            “போக்கா…”
            சிணுங்கியபடியே மாடிப் படிகளில் தாவி ஏறினான். மச்சானைப் பார்க்கும் போது மாணிக்கத்துக்கு பெருமையாக இருந்தது.
            “ரஜினி மாதிரி இருக்கிய மச்சான்..
            அவனுடன் பேசிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது.
            “ராகவா
            மாமா கூப்பிட்டார்.
            “தோட்டத்திலே கொஞ்சம் வேலை இருக்குமதியச் சாப்பாட்டுக்கு வந்திருவேன். மாணிக்கம் இருக்கான்லே பொழுது போயிடும்..மீண்டும் மொபட் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்டது. விஜயராகவன் மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு கீழிறங்கினான்.
            “தேரிக்காட்டுக்கு போயிட்டுவர்றோம்..
            பதில் இல்லை.
            மாணிக்கம் ஏதோ சொல்ல வாயைத் திறந்தான். அக்கா குட்டிய குட்டுää இன்னமும் வலித்ததால் வாயைமூடிக் கொண்டான். தேரியில் நிறைய ஊசி இலை மரங்கள் பயிராகி இருந்தது. பெயர் தெரியாத நிறைய செடிகள் வளர்ந்திருந்தன. காட்டு இலாகாவின் போடு கண்ணில் பட்டது. காற்று வேகமாக இருந்தது. வானத்தில் சிகப்பு மேகமாய் செம்மண் மிதந்து வந்தது. கொல்லாமர மூட்டில் அமர்ந்து கொண்டார்கள். மாணிக்கம் பட்டணத்தைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டான்மதியச் சாப்பாட்டுக்கு வீடு திரும்பிய போது அத்தை வந்திருந்தாள். ஆசையோடு அவனை நலம் விசாரித்தாள். மாமாவும் வந்துவிடவே ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.
            “எங்க அக்கா நல்லா சமைக்கும் மச்சான்…”
            பெரிய பெரிய உருண்டையாய் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் மாணிக்கம். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு குட்டித் தூக்கம் போட நினைத்த விஜயராகவன் இருட்டும் வரையில் அயர்ந்து தூங்கினான். பக்கத்தில் பாயில் மாணிக்கம் சென்னையைப் பற்றிய கவலைகளில் மல்லாந்து படுத்தபடி காலையாட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று ஒலி பெருக்கியில் நாதஸ்வர முழக்கம்.
            “என்னடா விசேஷம்?”
            “மழை பெய்யும் மச்சான்அதுக்குத்தான் அம்மனுக்கு ப10ஜை எடுக்கறாங்கஇரவில் மாணிக்கத்தோடு விஜயராகவனும் கோவிலுக்குச் சென்றான். அவன் இன்னார் என்று தெரிந்ததும் பலரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. ஒன்றிரண்டு பேர் பெயருக்கு வந்து விசாரித்து விட்டுப் போனார்கள். அநேகரது பார்வையில் சிநேகம் இல்லை. விஜயராகவன் அமர்ந்திருந்த இடத்துக்குப் பின்னால் அவன் காதுபட சில பேர் பேசினார்கள்.
            “அப்பன்காரன் கஞ்சிக்கு இல்லாம் உடை வெட்டிகிட்டு அலைஞ்சான்இப்ப பாரு கோட்டு சூட்டுதான் காரு பங்களாதான்…”
            “பிச்சை எடுத்து அலைஞ்சிக்கிட்டிருந்தவனுவ மெட்ராஸ் போன பிறவு பெரிய மனுஷன் ஆயிட்டான்.
            அப்பா சொன்னது எவ்வளவு சரி.
            “ஊர்ல நாம முன்னேறியிருக்கிறதை யாருமே பாராட்டலைடாகோவில் கொடைக்கு போன என்னைஅந்த ஊர்லேயே பிறந்து வளர்ந்த என்னைஒருவனும் வான்னு கேட்கலேநேத்து வெள்ளனே நீத்துப் பாவம் குடிச்சிக் கிட்டு கிடந்த பயதானேன்னு அத்தனை பேரும் பேசறானுவ…. நேத்து இருந்ததுதான் அவனுக கண்ணுக்குத் தெரியுதுஇன்னைக்கு எப்படி இருக்காருää எத்தனை நாட்டுக்கு போயிட்டு வந்திருக்காருää எவ்வளவு பெரிய ஆட்கள் கிட்டே தொடர்பு வச்சிருக்காருஎவ்வளவு அனுபவத்தை சம்பாதிச்சிருப்பாருஇதை எவனும் பேசலே.. நேத்து வெள்ளனெ எப்படி இருந்தான்இதைத்தான் பேசுவான்.
            விஜயராகவன் எழுந்து கொண்டான். மச்சான்.. மச்சான்ää கும்பாட்டம் இருக்குதஞ்சாவ10ர் ப10வு ஆடுதுபார்த்திட்டுப் போவோம் மச்சான்…”
            “நீ பார்த்திட்டு வா…”
            வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டான். வெகு நேரம் கிராமத்து மனிதர்களைப் பற்றியே மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.
            ஆறுமுகநேரி கல்யாண வீட்டிற்கும் திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயத்துக்கும் சென்று வந்தபிறகு கிராமத்திற்குள் அதிகமாக நடமாடவில்லை. ஏதோ இனம் தெரியாத வெறுப்பு மனதில் நிரம்பியிருந்ததுää நான்குநாட்களிலும் மாமா வீட்டில் விருந்து தடபுடலாக இருந்தது. பொன்மணி மீண்டும் கண்களில் தட்டுப்படவே இல்லை.
            நான்காம் நாள் விடை பெறும் போது சுவரில் சாய்ந்து நின்றிருந்தவளின் கண்கள் முத்துக்கள் கோர்த்திருந்தன. மாணிக்கம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்தான்.
            “எங்கின படுப்பிய மச்சான்.?”
            மேலே பர்த்தை கை காட்டினான்.
            “விழுந்திருவியகீழேயே பேப்பர் விரிச்சி படுத்துக்குங்க…” அவனது கன்னத்தில் செல்லமாகத் தட்டினான். ரெயில் ஓடிக் கொண்டிருந்த போது அம்மன் கோவில் சம்பவம் வேப்பங்காயாக கசந்தது. கிராமத்து மனிதர்களுக்கு கிராமத்தைப் போலவே மனம் விசாலமாகவில்லை. இருப்பினும் ஒரு ஆறுதல். கிராமத்துத் தென்றலாய் பொன்மணியின் எழிலுருவம் அவன் உள்ளத்தை மெல்ல வருடியது. மாமன் மகளின் நினைவுகள் உடம்பை சிலிர்க்க வைத்தது. அந்த செங்காந்தள் விரல்களின் ஸ்பரிசத்துக்காக மனதும் உடம்பும் ஏங்கியது. அதிவிரைவில் கிராமத்தை நோக்கி மீண்டும் ஒரு பயணம் இருக்கும் என்று மனது ஆனந்தம் பொங்க தடதடவென ரெயிலின் ஓசையாய் அடித்துக் கொண்டது.

தாய்வார இதழ்
05.03.1989

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக